/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பனி நிலநடுக்கம்
/
அறிவியல் ஆயிரம் : பனி நிலநடுக்கம்
PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பனி நிலநடுக்கம்
உலகின் பெரிய தீவு கிரீன்லாந்து. பூமியில் அண்டார்டிகாவுக்கு அடுத்து பெரிய பனிப்படலம் இங்குதான் உள்ளது. இதன் பனிக்கட்டியின் தடிமன் 1.67 கி.மீ. முதல் 3 கி.மீ., வரை இருக்கிறது. 1.8 கோடி ஆண்டுகளுக்கு முன் இவை தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதன் பனிப்படலத்தின் ஆழத்தில், ஆயிரக்கணக்கான பனி நிலநடுக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பனிப்பாறைகளின் இயக்கம், சர்வதேச காலநிலை பற்றிய நம் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.