PUBLISHED ON : ஜன 25, 2026 01:56 AM

மதுரையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்புவிடம், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்ற அ.தி.மு.க.,வின் வாக்குறுதி குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கஞ்சா கருப்பு, 'ஒரு படத்தில் போலீஸ் வண்டியை நான் தள்ளிட்டு வந்துருவேன். குடிச்சா ஓட்டிகிட்டு தானே போகக்கூடாதுன்னு சொன்னீங்க; நான் தள்ளிட்டு தானே வர்றேன்னு சொல்வேன்.
'சாயங்காலம், 6:00 மணிக்கு ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் ஆண்களுக்கு, 'ப்ரீ பஸ்' விடுங்க. நாங்க எங்க இஷ்டத்துக்கு குடிச்சுட்டு, வீட்டுல போய் படுக்கிறோம். பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் இருக்கும்போது, ஆண்களுக்கு விட மாட்டீங்களா'ன்னு கேட்பேன். அதைத்தான் இன்றைக்கு பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார்' என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், 'இவரது காமெடியை தான் பழனிசாமி சுட்டுட்டாரா...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

