உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியலில் சுதேசி
விவசாயத் துறை மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் பங்கு கால்நடைகளில் இருந்தே வருகிறது. 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கால்நடை வளர்ப்பு சுய வேலை வாய்ப்பை தருகிறது. கால்நடைகளில் உள்நாட்டு கால்நடை வளமே நிரந்தரமான செல்வம். உள்நாட்டு கால்நடை இனங்கள் பருவகால மாறுதல் மற்றும் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இந்த சுதேசி கால்நடை இனங்களை பரவலாக்க மத்திய அரசு ‘ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தவிர உள்நாட்டு இனப்பெருக்க மேம்படுத்த தேசிய காமதேனு இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
