/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: மருதாணிக்கு நிறம் எப்படி
/
அறிவியல் ஆயிரம்: மருதாணிக்கு நிறம் எப்படி
PUBLISHED ON : நவ 23, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
மருதாணிக்கு நிறம் எப்படி
மருதாணி கைகளுக்கு அழகு தருகிறது. மருதாணி செடியின் இலைகளில் இருக்கும் 'லாசோன்' என்ற வேதிப்பொருள்தான் தோலில் படிந்து பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது. ஆப்ரிக்கா, ஆசியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பழக்கம் தோன்றியது. மருதாணி இலையில் இயற்கையாக உள்ள இந்த 'லாசோன்' நைசாக அரைத்து எடுக்கும்போதுதான் வெளிப்படும். கை, உடலின் மேற்புறத் தோலில் உள்ள சிலவகை கெரட்டின் புரதத்துடன் பிணைந்து கொண்டு நிலையாகப் படிந்துவிடும். அவ்வாறு படிய சில மணிநேரம் ஆகும்.

