உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
புதிய வகை சிலந்தி
சிலந்தி வகைகளில் 'பிங்க் பிளோயட்' என்ற புதிய இனத்தை தென் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். நீளம் 3 - 4 மி.மீ., இவை எறும்பு, ஈ, கொசு, வண்டுகளை உணவாக உட்கொள்கிறது. இவற்றில் பல தொந்தரவு தரும் அல்லது நோய் பரப்புபவையாக கருதப்படுகின்றன. முக்கியமாக இது தன் உடல் அளவை விட, ஆறு மடங்கு பெரிய உயிரினத்தை (எறும்பு உட்பட) பிடித்து உண்கிறது. இதன் தோற்றம், பரிணாம வளர்ச்சி, சூழலியல் பங்கு ஆகியவற்றை புரிந்துகொள்ள டி.என்.ஏ. அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
