/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் நீரில் கரையும் பிளாஸ்டிக்
/
அறிவியல் ஆயிரம் நீரில் கரையும் பிளாஸ்டிக்
PUBLISHED ON : மார் 31, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நீரில் கரையும் பிளாஸ்டிக்
உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பையாக தான் மாறுகிறது. இவை மண்ணில் மட்குவதற்கு நீண்டகாலம் ஆகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். இது தரத்தில் இதர வகை பிளாஸ்டிக் போல இருக்கும். ஆனால் இதை உப்புத்தண்ணீரில் விடும் போது, விரைவில் கரைந்து விடுகிறது. இது கரைந்த உடன் பிளாஸ்டிக் பாதிப்பில்லாத சேர்மங்களாக உடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கிறது.