PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
யாருக்கு ஊதியம் அதிகம்
எந்த துறையிலும் திறமை, ஆர்வம், தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதற்கு மற்ற எதுவும் தடையில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அமெரிக்க ஆய்வு வித்தியாசமான முடிவை வெளியிட்டுள்ளது. ஒருவரின் உருவ அமைப்புக்கும் - அவரது தொழில் வெற்றிக்கும் தொடர்புள்ளது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 40 ஆயிரம் எம்.பி.ஏ., பட்டதாரிகளிடம் ஆய்வு நடத்தினர். இதில் அழகாக இருப்பவர்கள், மற்றவர்களை விட 11 சதவீதம் கூடுதல் ஊதியம் பெறுகின்றனர் என கண்டறிந்தனர்.
