/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : வானில் ஒரு ரத்த நிலா
/
அறிவியல் ஆயிரம் : வானில் ஒரு ரத்த நிலா
PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வானில் ஒரு ரத்த நிலா
இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் செப். 7, 8ல் 82 நிமிடம் நிகழ்கிறது. உலகில் இந்தியா உட்பட 77% பகுதியில் இதை பார்க்கலாம். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி, நிலவு வரும்போது, நடுவிலுள்ள பூமி சூரிய ஒளியை மறைத்து, அதன் நிழல்தான் நிலவில் விழும். இதுதான் சந்திர கிரகணம். செப். 7ல் நிலவானது பூமிக்கு அருகில் வருவதால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுகிறது. அலை நீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' எனப்படுகிறது.