/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : செயற்கைக்கோளை ஒன்றிணைத்தல்
/
அறிவியல் ஆயிரம் : செயற்கைக்கோளை ஒன்றிணைத்தல்
PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
செயற்கைக்கோளை ஒன்றிணைத்தல்
உலகின் நான்காவது நாடாக, சமீபத்தில் இரு செயற்கைக்கோளை ஒன்றிணைத்து இந்தியா சாதித்தது. உலகில் முதன்முதலாக 1966 மார்ச் 16ல் 'ஜெமினி 8' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா', இரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது. இதற்கடுத்து 1967 அக். 30ல் சோவியத் யூனியன் (ரஷ்யா), 'காஸ்மோஸ் 186', 'காஸ்மோஸ் 188' என இரு ஆளில்லா விண்கலத்தை இணைத்தது. மூன்றாவதாக சீனா, 2011 நவ. 2ல் சீனா அனுப்பிய 'ஷென்சு' ஆளில்லா விண்கலம், 'டியான்கங் 1' என்ற விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

