PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிறமற்ற வாயு
ஹீலியத்தின் அணு எண் 2. இது பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து அதிகமுள்ள தனிமம். இது மந்த வாயுக்களில் ஒன்று. நிறமற்றது, மணமற்றது. அனைத்து வேதிப்பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களிலும் கடலடிக்கு நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கிலும் ஹீலியம் உதவுகிறது. நஞ்சற்றதாகவும் எளிதில் அழுத்தப்படக் கூடியதாகவும் இருப்பதால், ஆழ்கடல் நீந்துதலுக்கான சிறப்பு சுவாசக் கருவிகளில் ஹீலியம் சேர்க்கப்படுகிறது. நட்சத்திர மண்டலங்களை உருவாக்குவதில் ஹீலியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

