உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிறமற்ற திரவம்
இந்திய எரிசக்தி துறையில் தற்போது 'எத்தனால்' பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் என்பது கரும்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒருவகை எரியக்கூடிய, நிறமற்ற ஆல்கஹால். இது வாகன உயிரி எரிபொருளாகவும், மருந்து தயாரிப்புகள், கிருமிநாசினிகளில் கரைப்பானாகவும், மதுபானங்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகிறது. இது 'எத்தில் ஆல்கஹால்' எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் மொத்த எத்தனால் உற்பத்தியில் 80 சதவீதம் முதலிரண்டு இடத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளது. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.
