/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: குறையும் சூரிய ஒளி
/
அறிவியல் ஆயிரம்: குறையும் சூரிய ஒளி
PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
குறையும் சூரிய ஒளி
இந்தியாவில் சூரிய வெளிச்சத்தின் அளவு கடந்த 40 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்கு கட்டுப்பாடற்ற காற்று மாசுபாடு, சமநிலையற்ற மேகமூட்டம் உள்ளிட்டவையே முக்கிய காரணம் என பனாரஸ் ஹிந்து பல்கலை, இந்திய வானிலை மையம் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 1988 - 2018ல் நாட்டிலுள்ள 20 வானிலை மையங்களின் தரவுகளில் இருந்து தினசரிசூரிய ஒளி பிரகாசிக்கும் நேரம் கணக்கிடப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் சூரிய ஒளியின் நேரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டது. தாவர வளர்ச்சி, மின்சார உற்பத்தி என சூரிய ஒளியின் பங்கு அளப்பரியது.