/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: பூமி - செவ்வாய் தொடர்பு
/
அறிவியல் ஆயிரம்: பூமி - செவ்வாய் தொடர்பு
PUBLISHED ON : டிச 24, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பூமி - செவ்வாய் தொடர்பு
செவ்வாய் கோளில் ஆய்வு செய்யும் 'நாசா'வின் விண்கலம், ஆர்பிட்டர், லேண்டர், ரோவரின் பூமியுடனான தொடர்பு தற்காலிகமாக தடைபட்டுள்ளது. இதற்கு காரணம் 'சூரிய சேர்க்கை'. 2 ஆண்டுக்கு ஒருமுறை இது ஏற்படும். இச்சமயத்தில் சூரியனுக்கு ஒருபுறம் பூமி, மற்றொரு புறம் செவ்வாயும் நேர் எதிராக அமையும். இதனால் நாசாவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள், விண்கலத்துக்கு அனுப்பும் 'கட்டளையை', இரு கோளுக்கும் நடுவில் உள்ள சூரியன் தடுத்து விடும். 2026 ஜன. 9க்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். விண்கலம் ஆய்வில் எந்த சிக்கலும் இருக்காது.

