PUBLISHED ON : டிச 25, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
சிறிய உயிரினம்
எறும்பை விட சிறிய உயிரினம் 'பேர் பிளே' என அழைக்கப்படும் 'மைமெரைட்'. இது பூச்சியினத்தை சேர்ந்தது. நீளம் 0.5 - 1.0 மி.மீ., கருப்பு, மஞ்சள், பழுப்பு நிறத்தில் காணப்படும். இது எறும்பைவிட சுமார் 400 மடங்கு சிறியது. மனிதத் தலைமுடியின் தடிமனைப் போல மூன்று மடங்கு பெரியது, அனைத்து பூச்சிகளையும் போல ஆறு கால்கள், இறக்கை உள்ளிட்டவை உள்ளன. 1833ல் அயர்லாந்து விஞ்ஞானி அலெக்சாண்டர் ஹென்றி இதை முதன்முதலில் கண்டுபிடித்தார். தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வாழ்கின்றன.

