உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
மலை உருவாவது எப்படி
தண்ணீருக்கு ஆதராமாக இருப்பது மலைகள். பூமியின் உள்ளே இருந்து வெளியே வருவது தான் மலைகள். இதில் கற்கள் பகுதி என்றால் கற்கள் நிரம்பி இருக்கும். இமயமலைபோல கடலின் அடியிலிருந்து உருவாகிறது என்றால் கடலடி மண், கற்கள், மீனின் புதைபடிவங்கள் இருக்கும். நீரில் மிதக்கும் கப்பலைப் போல, பூமியின் மேலோடு அதற்குக் கீழே குழம்பு நிலையில் இருக்கும் அடுக்கின் மீது அங்கும் இங்கும் நகர்கிறது. மேலோடு, பல்வேறு சில்லுகளாக உடைந்துள்ளதால் சில சமயம் பக்கவாட்டில் உரசிக்கொண்டு எரிமலை, பூகம்பத்தை ஏற்படுத்தும்.
