/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
கடலுக்குள் சாகசம்
கடலின் மேற்புறத்தில் இருந்து 660 அடி ஆழம் பயணிக்கும் '660 ஏ.வி.ஏ.,' என்ற நீர்மூழ்கியை அமெரிக்காவின் டிர்டன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் நீளம் 9 அடி. அகலம் 14.8 அடி. இதில் பைலட் உட்பட 9 பேர் பயணிக்கலாம். வண்ண விளக்குகள், மியூசிக் உட்பட பல வசதிகள் உள்ளன. இது மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்லும். கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வு, விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கடல்வாழ் உயரினங்கள், பளவப்பாறைகள் போன்றவற்றை ரசிக்கலாம்.
தகவல் சுரங்கம்
சர்வதேச நடன தினம்
நடனம் ஒரு சிறந்த கலை. நடனத்தில் பங்கேற்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. உலகளவில் நடனத்தை கொண்டு சேர்ப்பது, அனைத்து வித நடனத்தின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏப். 29ல் சர்வதேச நடன தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச தியேட்டர் இன்ஸ்டிடியூட், ஐ.நா.,வின் யுனெஸ்கோ இணைந்து இத்தினத்தை உருவாக்கியது. பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் (ஏப். 29) நடன தினமாக தொடங்கப்பட்டது.

