/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பல வடிவ உயிரினம்
கிராமங்களில் வீட்டு கூரை மீது அடை அடையாகப் பச்சை படர்ந்திருக்கும். இதை பாசி எனவும் அழைப்பர். ஆனால் இது பாசி என்ற ஒற்றை உயிரினம் கிடையாது. பாசியும், பூஞ்சையும் சேர்ந்த கூட்டுயிரி. இதற்கு ஆங்கிலத்தில் 'லைக்கன்ஸ்' என பெயர். பாறைகள் மீது மஞ்சள் நிறத்தில் பஞ்சு போன்ற இழைகளைப் பார்த்திருப்போம். அதுவும் ஒரு வகை 'லைக்கன்ஸ்' தான். பாலைவனம் முதல் உறைபனி வரை எல்லா பிரதேசத்திலும் இவை வளரும். பல நிறங்களில், வடிவங்களில் இருக்கும். உலகில் இதுவரை 15 ஆயிரம் வகை லைக்கன்ஸ் கண்டறியப்பட்டுள்ளன.
தகவல் சுரங்கம்
செஞ்சிலுவை சங்க தினம்
* உலகில் போர் பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8ல் உலக செஞ்சிலுவை சங்க தினம் கடைபிடிக்கப் படுகிறது. இந்த அமைப்புக்கு 1917, 1944, 1963 என 3 முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.* இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) பலியானவர் களுக்கு நினைவஞ்சலி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் தினம் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.

