/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
குழந்தையை பாதிக்கும் அலைபேசி
அலைபேசி அதிகம் பயன்படுத்தும் தாய்மார்கள் தங்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் குறைவாகவே பேசுகின்றனர். இது அந்த குழந்தையின் மொழி வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு அலைபேசி பயன்படுத்துவதற்கு முன், தாய் நன்கு யோசிக்க வேண்டும். அலைபேசி பயன்படுத்தும் போது, தாய்மார்கள் குழந்தைகளிடம் 26 சதவீதம் குறைவாக பேசுகின்றனர். 16 ஜோடி 'தாய் - குழந்தை'கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
தகவல் சுரங்கம்
உலக சாக்லேட் தினம்
பலருக்கும் பிடித்தமானது 'சாக்லெட்'. உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஜூலை 7ல் உலக சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லெட் பரிமாறப்படுகிறது. முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லெட் அறிமுகமானது. இது 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30%) முன்னணியில் உள்ளது.