/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜன 12, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
வண்ணத்துப்பூச்சியின் பளபளப்பு
உலகில் 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இவற்றுக்கு வாய், பல் இல்லை. பூக்களில் உள்ள தேனை உறிஞ்ச 'ஸ்ட்ரா' போன்ற உறிஞ்சு குழல் உள்ளது. இதற்கு சுவை அறியும் தன்மை கிடையாது. பசை போன்ற திரவத்தை இலையில் தடவிய பின், பாதுகாப்பாக முட்டை இடுகின்றன. நான்கு இறக்கை உள்ளது. கண் கவரும் நிறங்களை கொண்டது. முட்டை, லார்வா, கூட்டுப்புழு, வளர்ந்த பருவம் என நான்கு பருவங்கள் உண்டு. இறக்கைகள் மீதுள்ள வண்ண நிற செதில்கள் தான், பளபளப்பிற்கு காரணம். செதில்களை அகற்றி விட்டால் தெளிந்த பகுதிபோல் தோன்றும்,
தகவல் சுரங்கம்
தேசிய இளைஞர்கள் தினம்
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மிக சிந்தனை கொண்ட இவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். 1881ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். 1886ல் துறவியானார். துறவிகள் என்றால் சாதுக்களாக மட்டுமல்லாமல் வீரமாகவும் இருக்க வேண்டும் என்பார். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பண்பாடு, கலாசாரம் குறித்து போதித்தார். மேலை நாடுகளிலும் சொற்பொழிவு நடத்தியுள்ளார்.