/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
சுருங்கும் நிலா
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இந்நிலையில் இது உருவான 440 கோடி ஆண்டுகளில் 150 அடி சுற்றளவுக்கு சுருங்கியுள்ளது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நிலவின் மையப்பகுதியின் வெப்ப நிலை குறைந்து அது குளிர்ச்சி அடைவதுதான் இதற்கு முக்கிய காரணம். இதனால் நிலவின் மேற்பரப்பில் விரிசல் விழுகின்றன. தவிர நடுக்கம் ஏற்படுகிறது. இது 'நிலா' நடுக்கம் என அழைக்கப்படுகிறது. இது 'ஆர்டிமிஸ்' திட்டத்தின் கீழ் 2026ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நாசாவின் முயற்சிக்கு சவாலாக உருவெடுக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக புற்றுநோய் தினம்
புற்றுநோய் பாதிப்பை தடுப்பது, சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிப்., 4ல் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'பராமரிப்பு இடைவெளியை நிறுத்துதல்: புற்றுநோய் சிகிச்சைக்கு ஒவ்வொருவருக்கும் தகுதி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் 2வது இடத்தில் புற்றுநோய் உள்ளது. உலகில் ஆண்டுக்கு 1 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது உடலில் உள்ள ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவி உடல் உறுப்புகளை பாதிக்கிறது. இதில் பல வகைகள் உள்ளன.