/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நீர் - பால் வித்தியாசம்
பால், குழம்பில் தோன்றும் ஆடையை, ஆறியதும் எடுத்துப் பார்த்தால் சவ்வு போல இருக்கும். பாலில் உள்ள கொழுப்பு, புரதம் விரைவில் கொதிநிலைக்கு வந்துவிடும். பால் என்ற கூழ்மத்திலிருந்து பிரிந்து வரும் அடர்த்தி குறைவான கொழுப்பு, மேலே வந்து மேற்பரப்பில் மெல்லிய படலமாகப் படிந்துவிடும். சாம்பார், குழம்பை பொறுத்தவரை அதில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகளில் இருந்து பிரியும் புரதம், கொழுப்பு முதலியவை மேலே படர்ந்து மெல்லிய படலமாகப் படியும். நீரில் கொழுப்பு, புரதம் இல்லாததால் படலம் படிவது இல்லை.
தகவல் சுரங்கம்
காவிரியின் துணை ஆறு
காவிரி ஆற்றின் முக்கிய கிளை நதி கபினி. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி பாய்ந்து கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இதற்கான நீர் ஆதாரம் பனமரம், மனத்தாவடி ஆறுகளில் இருந்து கிடைக்கிறது. கபினி ஆற்றின் நீளம் 240 அடி. மைசூரூ மாவட்டம் நரசிபுரா பகுதியில் கபினி ஆற்றின் குறுக்கே கபினி அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீளம் இதன் நீர்த்தேக்கம் தான் கர்நாடகாவின் பந்திப்பூர் தேசியப் பூங்காவையும், நாகரஹோளே தேசியப் பூங்காவையும் பிரிக்கிறது.