/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தாவரத்துக்கு எந்த நீர் சிறந்தது
தாவரங்களுக்கு நீர் தேவை. இதை மழையில் இருந்தும், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்தும் பெறுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. பல தாவரங்களின் இயற்கைப் போக்கின்படி, அவை மழைக் காலங்களில் செழித்து வளரும். எனவே மழைக்காலம் பச்சைப் பசேல் என இருக்கும். இதைப் பார்த்து மழையில் செழித்து வளர்கிறது என தவறாகக் கருதுகிறோம். சிலசமயம் காற்றில் கலந்துள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற தாவரங்களுக்கு வேண்டிய சத்துகளை மழைநீர் கரைத்துப் பொழியலாம். இதனால் மழைக்காலங்களில் பல தாவரங்களுக்கு கூடுதல் சத்துகள் கிடைக்கும்.
தகவல் சுரங்கம்
நான்காண்டுக்கு ஒரு பிறந்தநாள்
இன்றைய தேதி (பிப். 29) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும். ஒரு ஆண்டின் மொத்த நாட்கள் 365. லீப் ஆண்டில் மொத்த நாட்கள் 366. கூடுதலாக சேர்க்கப்படும் அந்த நாள் தான் பிப். 29. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365.25 நாட்களாகிறது. ஆனால் ஆண்டுதோறும் 365 நாட்கள் மட்டும் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள 0.25 (கால்வாசி) நாள், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பிப்., மாதத்தில் சேர்க்கப்படுகிறது. பிப்ரவரியில் 28க்கு பதிலாக 29 தேதியாக மாறுகிறது. இன்று பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் பிறந்நநாள் வரும்.

