/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
ஆந்தையின் இரவு பார்வை
ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது என்பார்கள். உயிரினங்களில் சில காலையிலும், சில இரவிலும் இரை தேடும். ஆந்தை இரவில் இரை தேடக்கூடியது. இதற்கு இரவில் கண்பார்வை நன்றாகத் தெரியும்படி அதன் உடல் அமைப்பு உள்ளது. ஆந்தையின் விழித்திரையில் குச்சி செல்கள் அதிகமாக இருக்கின்றன. இவை மங்கிய வெளிச்சத்திலும் செயல்படக்கூடியவை. அதனால் தான் ஆந்தையால் இரவிலும் நன்றாகப் பார்க்கமுடிகிறது. பகலில் பிரகாசமான ஒளிக்கதிர்களைப் பெறக் கூடிய கூம்பு செல்கள் குறைவாக இருப்பதால் ஆந்தைக்கு பகலில் பார்வை நன்றாகத் தெரிவதில்லை.
தகவல் சுரங்கம்
செயற்கை கால்வாய்
சீனாவில் 'உள்ள கிராண்ட் கால்வாய்' உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரிய கால்வாய் என அழைக்கப் படுகிறது. இது சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்கி ஹெபேய், ஷாண்டாங், ஜியாங்ஷூ நகரங்கள் வழியாக ஹாங்ஷூ நகரில் யாங்ட்ஜ் ஆறு, மஞ்சள் ஆற்றுடன் இணைகிறது. இக்கால்வாயின் உயரமான இடம் சான்டாங் மலை உச்சியில் (138 அடி) அமைந்துள்ளது. இதன் நீளம் 1776 கி.மீ. இக்கால்வாயில் கப்பல்கள் செல்கின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் உள்ளது. சீனாவின் சுற்றுலாத்தலங்களில் முக்கிய பகுதியாக விளங்குகிறது.

