/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
எந்த வாயு அதிகம்
காற்றில் அதிகபட்சமாக நைட்ரஜன் வாயு 78.08, ஆக்சிஜன் 20.95 சதவீதமும் உள்ளன. தவிர கார்பன்-டை-ஆக்சைடு, ஹீலியம், மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளன. மனிதர்களுக்கு ஆக்சிஜன், மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது. நாம் மூக்கு வழியே சுவாசிக்கும் காற்று மூச்சுக் குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. அங்கு வேதியியல் மாற்றத்தால் ஆக்சிஜன் மட்டும் சிறிதளவு ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினுடன் கலந்து உடல் செல்களுக்கு அனுப்பப்படுகிறது. உடலில் எதனுடனும் வினை புரியாத நைட்ரஜன், கார்பன் உள்ளிட்ட வாயு வெளியேற்றப்படுகிறது.
தகவல் சுரங்கம்
வனவிலங்கு தினம்
உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்து உள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மக்களையும் பிரபஞ்சத்தையும் இணைத்தல்; வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

