/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் உடல் பருமன்
உடல் பருமன் என்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது. உடல்பருமன் தற்போது உலகின் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகில் நுாறு கோடி பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது உலகில் 8 பேருக்கு ஒருவர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானோர் குறைந்த, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். குறைந்த எடையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உடல் பருமனால் பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர்.
தகவல் சுரங்கம்
உலகின் ஆழமான குகை
இந்தியாவில் ஆழமான குகை ஆந்திராவில் உள்ள போரா குகை. இது அனந்தகிரி மலைதொடரில் சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 2313 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் ஆழம் 260 அடி. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கோஸ்தானி ஆறு உருவான போது தோன்றியது. உலகின் ஆழமான குகை ஜார்ஜியாவில் உள்ளது. இதன் பெயர் வெரியோவ்கினா. இது சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 7497 அடி உயரத்தில் அமைந்துஉள்ளது. இதன் ஆழம் 7257 அடி. இதன் நீளம் 57,400 அடி. 1968ல் கண்டறியப்பட்டது.

