/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 08, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
வியாழனில் ஆக்சிஜன்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பெரியது வியாழன். இதற்கு 95 துணைக்கோள்கள் (நிலவு) உள்ளன. இதில் 'யூரோப்பா' நிலவும் ஒன்று. இந்த நிலவில் 24 மணி நேரத்துக்கு ஆயிரம் டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இங்கு நாள்தோறும் 10 லட்சம் பேர் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா 2011ல் வியாழன் கோளுக்கு அனுப்பிய ஜூனோ விண்கலம் 2016ல் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் தந்த தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
சர்வதேச பெண்கள் தினம்
இன்று பெண்கள் விவசாயம் முதல் விண்வெளி வரை கால் பதித்துள்ளனர். அனைத்து றைகளிலும் பெண்களுக்கான சம உரிமை, வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி மார்ச் 8ல் உலக பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண் என்பவள் மகள், சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர். 'உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்' என வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை. பெண்கள் மீதான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.

