/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நிலவில் அணுமின்
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இதில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. நிலவில் மின்சார தேவைக்கு சோலார் பேனலே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா - சீன விண்வெளி மையங்கள் இணைந்து திட்டமிட்டுள்ளன. இது 2033 - 2035க்குள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலவில் சூரிய ஒளி இல்லாதபோதும் மின்சாரம் கிடைக்கும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்னளர்.
தகவல் சுரங்கம்
பெண் நீதிபதிகள் தினம்
நீதியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் பெண் நீதிபதிகளின் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், அனைத்து நாடுகளும் நீதித்துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் மார்ச் 10ல் பெண் நீதிபதிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நீதியை எட்டுவதற்கு; அதிக பெண் நீதிபதிகளை பணியமர்த்த வேண்டும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் ஆண்களை விட பெண் நீதிபதிகள் அதிகம் உள்ளனர்.

