/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
வேகமாக ஓடும் ரோபோ
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் யூனிட்ரி நிறுவனம் மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் செல்லும் ரோபோ மனிதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட ரோபோ மனிதர்களில் இதுவே வேகமாக ஓடக்கூடியது. இந்த வேகத்தில் ஓடினால் மாரத்தான் துாரத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்து விடும். இதன் பெயர் எச்1. இதன் உயரம் 5 அடி 11 இன்ச். எடை 47 கிலோ. இதன் விலை ரூ. 74.63 லட்சம். இதன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.
தகவல் சுரங்கம்
தேசிய தடுப்பூசி தினம்
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் 1995 மார்ச் 16ல் போலியோ சொட்டு மருந்து அறிமுகமானது. இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

