/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நிலவு அதிகமுள்ள கோள்
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் மொத்தம் 293 நிலவுகள் (துணைக்கோள்) உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் அதிக நிலவுகள் கொண்டதாக சனி கோள் உள்ளது. இங்கு 146 நிலவுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள வியாழனில் 95 நிலவுகள் உள்ளன. 28 நிலவுகளுடன் மூன்றாவது இடத்தில் யுரேனஸ் உள்ளது. இது தவிர நெப்டியூனில் 16, செவ்வாயில் இரண்டு நிலவு உள்ளது. பூமியில் ஒரே ஒரு நிலவு மட்டும் உள்ளது. புதன், வெள்ளி கோள்களுக்கு நிலவுகள் இல்லை.
தகவல் சுரங்கம்
பெரிய உப்பு பகுதி
உலகின் பெரிய உப்பு படுகை பொலிவியாவில் அமைந்துள்ளது. இது 'சலார் டி யுயுனி' என அழைக்கப்படுகிறது. அந்நாட்டின் தென்மேற்கே ஆந்திஸ் மலைத்தொடர் அருகே உள்ளது. இதன் பரப்பளவு 10 ஆயிரம் சதுர கி.மீ. இதில் 1000 டன் அளவு உப்பு படிந்துள்ளது. சில இடங்களில் 32 அடி தடிமன் அளவு உப்பு படிந்துள்ளது. இது சராசரி கடல் நீர் மட்டத்தில் இருந்து 11,975 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 30 ஆயிரம் - 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மின்சின் ஏரி உருவானது போது இப்பகுதி உருவாகியது. . இப்பகுதி சுற்றுலா தலமாகவும் உள்ளது.

