உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிலவில் பெரிய கடல்
வியாழனின் 101 நிலவுகளில் ஒன்று 'யூரோபா'. இதில் மறைந்திருக்கும் கடல் திரவ நீர், பூமியின் மொத்த கடல் நீரின் அளவை விட இரண்டு மடங்கு அதிகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். 'யூரோபா' நிலவில் 30 கி.மீ., தடிமன் கொண்ட உறைந்த பனிக்கட்டி மேலோடுகள் உள்ளன. இது வியாழனிடம் இருந்து வரும் கதிர்வீச்சை எதிர்கொள்கிறது, மேலும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை -மைனஸ் 160 டிகிரி செல்சியஸ். இந்த கடுமையான சூழலிலும், அதன் பனி படர்ந்த மேலோட்டிற்குக் கீழ், பரந்த கடல் திரவ நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
