உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
மின்னல் வேக விமானம்
'சூப்பர்சானிக்' வகை விமானத்தை நாசா உருவாக்கி உள்ளது. 'சன் ஆப் கான்கோர்டு' என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் இது மணிக்கு 1150 கி.மீ., வேகத்தில் சென்றது. இவ்வகை விமானத்தில் இருந்து வெளியாகும் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. செலவு ரூ. 2334 கோடி. 43,400 அடி உயரத்தில் 81 நிமிடம் பறந்தது. இதில் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 4 மணி நேரத்தில் (தற்போது 8 மணி நேரம்) செல்லலாம். 'கான்கோர்டு' என்ற சூப்பர்சானிக் விமானத்தை பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து 1976ல் அறிமுகப்படுத்தியது. எரிபொருள் செலவு, ஒலி அளவு காரணங்களால் 2003ல் நிறுத்தப்பட்டது.
