/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகே விண்கல்
/
அறிவியல் ஆயிரம் : பூமிக்கு அருகே விண்கல்
PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பூமிக்கு அருகே விண்கல்
'2025 எப்.ஏ.22' விண்கல் செப். 18ல் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. இது டில்லியில் உள்ள குதுப்மினாரின் உயரத்தை (239 அடி) விட இரண்டு மடங்கு அதிகம். இந்த விண்கல் சூரியனை நீளமான, சாய்ந்த சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றுவதற்கு 1.85 ஆண்டுகள் ஆகிறது. இது செப். 18ல் பூமியை 8.4 லட்சம் கி.மீ., தொலைவில் கடந்து செல்கிறது. இந்ததுாரம் பூமி - நிலவு துாரத்தை விட இரண்டு மடங்கு அதிகம். இந்த விண்கல் பத்தாண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை பூமிக்கு அருகே கடந்த செல்கிறது. இது பூமி மீது மோதுவதற்கு எந்த சாத்தியகூறுகளும் இல்லை.