உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 20, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
புளூட்டோவில் நைட்ரஜன்
சிறுகோள் வரிசையில் உள்ள புளூட்டோ மேற்பரப்பில் திரவம் பாய்ந்ததற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். 2015ல் புளூட்டோவை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய 'நியூ ஹாரிஜன்ஸ்' விண்கலம் எடுத்த புகைப்படத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இது திரவ நைட்ரஜன் எனவும், பனிக்கட்டி மேற்பரப்புக்கு அடியில் உள்ள இது, விரிசல்கள் வழியே மேலே உயர்ந்து புளூட்டோவின் மேற்பரப்பை அடைந்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புளூட்டோ 1930ல் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனில் இருந்து 590 கோடி துாரத்தில் உள்ளது.
