/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிலவின் நிறம் என்ன
/
அறிவியல் ஆயிரம் : நிலவின் நிறம் என்ன
PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவின் நிறம் என்ன
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை தான், பூமியை அதன் அச்சில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதன் ஈர்ப்பு விசையால் தான் கடலில் அலைகள் தோன்றுகின்றன. நிலவு என்பது பாறைகள், தாதுக்கள், சிலிகேட்டுகளால் ஆனது. வளிமண்டலம் கிடையாது. நிலவில் பள்ளங்கள், மலைகள் உள்ளன. பூமியில் இருந்து பார்க்கும் போது, நிலவு வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கிறது என நினைக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளியையே நிலவு பிரகாசிப்பதால், அருகில் சென்று பார்த்தால் அடர் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

