உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
வெப்பத்தில் பாறை உருகுமா...
நிலம், கடல் பகுதிகள் அடங்கியது பூமியின் மேற்பரப்பு. நிலக்கோளத்தை தாங்கிபிடிக்கும் பூமியின் மேல் ஓட்டின் அடிப்பகுதி 100 கி.மீ., ஆழத்தில் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கும். அதன் கீழே கவசம் (மேன்டில்) எனும் பகுதி 3500 டிகிரி செல்சியஸ், பூமியின் கருவம் (கோர்) 5000 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே 100 கி.மீ.,க்கு கீழ் உள்ள அனைத்தும் குழம்பு, திரவ நிலையில் உருகி தான் இருக்கும். எனவே 20 - 30 கி.மீ., ஆழத்தில் வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ் தான். அங்கே உள்ள அழுத்தத்தில் இந்த வெப்பம், பாறைகளை உருக்க போதுமானது இல்லை.
