தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘பழனிசாமி வரலாறை மறந்துட்டாரோ?’

‘பழனிசாமி வரலாறை மறந்துட்டாரோ?’

‘பழனிசாமி வரலாறை மறந்துட்டாரோ?’


PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சமீபத்தில் மதுரையில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், அரசியல் அநாகரிகமாக தரம் தாழ்ந்து பேசி வருகிறார்; குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி குறித்து நாலாந்தரமாக பேசி வருகிறார். பழனிசாமியின் அனுபவம் என்ன; நிர்மல்குமாரின் அனுபவம் என்ன?

‘நீங்க எத்தனை கட்சிக்கு போனீங்க... பழனிசாமி காலில் எத்தனை தடவை விழுந்தீங்க... எத்தனை தடவை அவரை புகழ்ந்து பேசினீங்க என்பதெல்லாம் மறந்து விட்டதா? கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில், அரசியல் நாகரிகம் கருதி, த.வெ.க.,வை பாதுகாத்தவர் பழனிசாமி. அன்று உங்களை கைவிட்டு இருந்தால், உங்க கட்சி காணாமல் போயிருக்கும்’ என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘முதல்ல பழனிசாமி யார் கால்ல விழுந்து, முதல்வர் பதவிக்கு வந்தார் என்ற வரலாறை இவர் மறந்துட்டாரோ?’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us