PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

த.வெ.க., கூட்டணியில் இருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், சமீபத்தில் பெரம்பலுார் வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் சிறுபான்மையினர் ஏராளமான சவால்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய், சிறுபான்மையினர் நலனுக்கு போதிய நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார். லஞ்சம் இல்லாத அரசு, போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். முதல்வர் விஜய், அதற்கான செயல் வடிவங்களை கொடுத்து வருகிறார்.
‘தமிழர் தான் பிரதமர் வேட்பாளர் என, துணை ஜனாதிபதி என்ன... யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். தமிழகத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது, தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘கூட்டணி கட்சி என்ற முறையில் விஜய் தான் பிரதமர் வேட்பாளர்னு அல்லவா இவர் சொல்லியிருக்கணும்... ஆனா, பிடி கொடுக்காம நழுவுறாரே...’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
