PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

திருப்பத்துாரில் சமீபத்தில் நடந்த அரசு விழாவில், 460 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 57.55 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை, த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் வழங்கினார்.
பின் ரஞ்சித்குமார் பேசும்போது, ‘சிங்கப்பெண் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில், வங்கிகளோ, வங்கி மேலாளர்களோ அல்லது அரசு அதிகாரிகளோ, பயனாளி களை, ‘இன்று வா, நாளை வா’ என்று தேவையற்ற முறையில் அலைக்கழித்தாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ, மகளிர் உடனடியாக கலெக்டரை அணுகி முறையிடலாம்.
‘அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் என அனைவருமே, மக்கள் சேவகர்களே தவிர, எஜமானர்கள் அல்ல. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை தடையின்றி சேர்க்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அரசு வேடிக்கை பார்க்காது’ என்றார்.
இதைக் கேட்ட ஒரு பெண், ‘தி.மு.க., ஆட்சியில நம்மை அடிமைகள் மாதிரி நடத்தினாங்க... இப்ப தான் உரிய மரி யாதை கிடைக்குது’ என கூற, சக பெண்கள் ஆமோதித்தனர்.
