PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்தார். அப்போது, ‘எம்.ஜி.ஆர்., மாதிரி விஜய் மாறுகிறாரா?’ என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
உடனே ஆவேசமான ராஜு, ‘எம்.ஜி.ஆரின் கால் துாசிக்குக்கூட யாரும் வர முடியாது. புகழ் என்பது நீர்க் குமிழி போல வரும்; எழும்பும், அப்படியே சென்றுவிடும். இருக்கும் போது கொடுக்க வேண்டும். ஒரு எம்.ஜி.ஆர்., தான்; அவரை போல வேறு யாரும் வர முடியாது.
‘எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது. முதல்வர் விஜய் உட்பட யாரும் எம்.ஜி.ஆர்., போல் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தது கிடையாது’ என, நீண்ட விளக்கத்தை மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘இவரை மாதிரி விசுவாசம் மிக்க பக்தர்களால தான், தமிழக மக்கள்மத்தியில் இன்றும் எம்.ஜி.ஆர்., வாழ்ந்துட்டு இருக்காரு’ என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
