தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/'அவங்களே காணாம போயிடுவாங்க!'

'அவங்களே காணாம போயிடுவாங்க!'

'அவங்களே காணாம போயிடுவாங்க!'


PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அவர் கூறும்போது, 'ஆன்லைன் கட்சியான கரப்பான் பூச்சி கட்சி, தேச விரோதிகளுடன் சேர்ந்து, இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கிறது; இந்தியாவில் ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் பிரதமர் மோடி ஆட்சியை வங்கதேசம், நேபாளம் போல வீழ்த்த முயற்சிக்கிறது.

'தமிழகத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு முதல்வர் விஜய் அனுமதி தரக்கூடாது. கரப்பான் பூச்சியை ஆதரிக்கும் தி.மு.க., - கம்யூ., - வி.சி., கட்சியினர் சில மாதங்கள் முன்னர் வரை ஒன்றாக இருந்தவர்கள். தற்போது, த.வெ.க., அரசை கவிழ்க்க சதி செய்கின்றனர். வளர்ச்சி அரசியலுக்கு எதிரான கம்யூ., கட்சிகளை தடை செய்ய வேண்டும்' என்றார்.

உடனிருந்த ஹிந்து மக்கள் கட்சி தொண்டர் ஒருவர், 'கம்யூ., கட்சிகளை தடை எல்லாம் பண்ண வேண்டாம்... சில வருஷங்கள்ல அந்த கட்சிகளே காணாம போயிடும்' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us