PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

சென்னை ஆவடி மாநகராட்சி மன்ற கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் உதயகுமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில், 48வது வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் காமேஷ் பேசும் போது, திடீரென இரண்டு முறை, சில நிமிடங்கள் மின்வெட்டு ஏற்பட்டது.
அப்போது, ‘ஆளும் த.வெ.க., அரசின் அலங்கோலம்’ என, சில கவுன்சிலர்கள் குரல் எழுப்பினர். இதை, மற்ற கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அந்நேரம் யாரும் எதிர்பாராத நேரத்தில், கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து மூன்று முறை விசிலடிக்கும் சத்தம் கேட்டது. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் ஒருவர், ‘இருட்டாக இருக்கே... கூட்டத்தில் யார் விசிலடித்து இருப்பர்?’ என கேள்வி எழுப்பினார்.
சக நிருபர், ‘வேற யாரா இருக்கும்... த.வெ.க., ஆதரவாளர் தான் விசிலடித்து இருப்பார்’ என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.
