தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘ரகசிய கூட்டை நிரூபிச்சிட்டாரே!’

‘ரகசிய கூட்டை நிரூபிச்சிட்டாரே!’

‘ரகசிய கூட்டை நிரூபிச்சிட்டாரே!’

3


PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் சிவகாசியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது இவ்வளவு வேகமான கைது நடவடிக்கை தேவையில்லாதது. வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து மகேஷ் கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது. பழி வாங்கும் எண்ணம் இல்லாமல், நியாயமான நடவடிக்கை எடுத்தால் பாராட்டத்தக்கது.

‘எதிர்க்கட்சிகளை அழித்து விடலாம் என த.வெ.க., நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி உள்ளது. ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த எதிர்வினை அவர்களை சுடும்’ என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் ரகசிய கூட்டு இருக்குன்னு, த.வெ.க., அமைச்சர் நிர்மல்குமார் அடிக்கடி சொல்றாரு... இவர், அதை நிரூபிச்சிட்டாரே’ என முணு முணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us