PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி சமீபத்தில் கரூரில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் தேர்தல் முறைகளில் இருந்த நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டு, குறுக்கு வழியில் தேர்தல் தில்லுமுல்லு மூலம், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளன. இந்தியாவில் நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறும் வரை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் தொடர்ந்து சமரசமின்றி போராட்டம் நடக்கும்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘அப்படின்னா, 2024 லோக்சபா தேர்தல்ல இவங்க ஜெயிச்சதுலயும் முறைகேடு நடந்திருக்குன்னு சொன்னா ஏத்துக்குவாங்களா?’ என முணுமுணுத்தார்.
சக நிருபரோ, ‘அதை மட்டும் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க’ என்றபடியே நடையை கட்டினார்.
