PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வேலுாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘மத்திய பா.ஜ., அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம், நாடு முழுதும் 13.50 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்.
‘கேரள சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரியும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதேபோல், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவர் விரிக்கிற வலையில் எல்லாம் விஜய் லேசுல விழுந்துட மாட்டார்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
