உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சமீபத்தில் வேலுார் வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில், ஒருவர் நீக்கப்பட்டார் என்பதற்கான ஒரு உதாரணத்தைக்கூட இதுவரை காங்கிரசார் காட்டவில்லை. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பாதி இத்தாலியர், பாதி இந்தியர் என்று கூட சொல்லலாம். ஒரு தேச துரோகி போல அவர் செயல்படுகிறார்’ என்றார்.
ராஜாவுக்கு அருகே நின்றிருந்த பா.ஜ., தொண்டர் ஒருவர், ‘ராகுலுக்கும் பொழுது போக வேண்டாமா... அதனால, அடிக்கடி ஏதாவது போராட்டங்களை பண்ணிட்டே இருக்காரு’ என கிண்டலாகக் கூற, சக தொண்டர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
