தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘இப்ப மரியாதை தந்தா போதும்!’

‘இப்ப மரியாதை தந்தா போதும்!’

‘இப்ப மரியாதை தந்தா போதும்!’

1


PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அப்துல் ராசிக் தலைமையில் சமீபத்தில் நடந்தது.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ரமேஷ் பேசுகையில், ‘பால்வளத் துறையில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் கறவை இயந்திரம், பால் கேன்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

‘தமிழகத்தில் பயிர் விளைச்சலில் மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்து விருது பெற்ற விவசாயிகள் இறந்தால், அவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்’ என்றார்.

இதை கேட்ட விவசாயி ஒருவர், ‘நாம உயிருடன் இருக்கும்போதே இந்த அதிகாரிகள் மரியாதை தந்தாலே போதும்’ என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us