PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., கருப்பையா, தன் தொகுதியில் உள்ள கச்சிராயிருப்பு ஊராட்சி நடுநிலை பள்ளியில் கட்டப்பட்டிருந்த, அங்கன்வாடி மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார்.
அப்படியே பள்ளிக்குள் சென்று மாணவர்களிடம் உரையாடினார். ‘தளபதி விஜய் மாமாவை பார்க்கிறப்ப என்ன சொல்லணும்?’ என கேட்டார். இதற்காகவே காத்திருந்தது போல மாணவர்கள் பலரும், ‘ரோடு, பஸ் வசதி, பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதி வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர் மண்டியதால், பாம்புகள் வருகின்றன. இவற்றை அகற்ற வேண்டும்’ என கோரிக்கைகளை அடுக்கினர்.
கருப்பையா, ‘இப்ப வந்து... நான் என்னத்த சொல்ல...’ என வடிவேலு பாணியில் விழித்தவர், மழுப்பலாக எதையோ கூறிவிட்டு, ஓட்டமும், நடையுமாக கிளம்பி விட்டார்.
இதை பார்த்த ஆசிரியர் ஒருவர், ‘நம்ம பயலுக, எம்.எல்.ஏ.,வை இந்த பக்கமே வரவிடாம பண்ணிட்டானுகளே’ என, ‘கமென்ட்’ அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
