உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 27, 2026 11:56 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிறம் மாறும் மலர்
அல்லி செடி வகையை சேர்ந்தது 'விக்டோரியா அமேசானிகா'. இதன் இலைகள், 10 அடி விட்டம் வளரக் கூடியவை. வட்டவடிவிலான இதன் இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. இதனால் இது 40 கிலோ எடையை தாங்கும். இதன் மலர் 40 செ.மீ., நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும். இத்தாவரத்தை செக்குடியரசின் டாடியாஸ் ஹீன்கி 1801ல் கண்டறிந்தார்.
