உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 06, 2026 12:11 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
உருவாகிறது புதிய கண்டம்
ஐந்து பெருங்கடல்களில் பெரியது பசிபிக். பரப்பளவு 15.5 கோடி சதுர கி.மீ. ஆனால் உலகில் அனைத்து கண்டங்கள், தீவுகளின் மொத்த நிலப்பகுதிகளின் பரப்பளவு 14.9 கோடி சதுர கி.மீ., மட்டுமே. மொத்த கடல் நீரில் பாதி பசிபிக்கில் உள்ளது. இந்நிலையில் பூமியின் தட்டுகள் நகர்தல், உள்வாங்குதல் காரணமாக பசிபிக்பெருங்கடல் சுருங்கி வருகிறது. ஆசியாவும் அமெரிக்காவும் நெருங்குவது, கடல் தட்டுகள் பூமியின்நடுப்பகுதிக்குள் இழுக்கப்படுவது இதற்கு காரணம். இது 'அமேசியா' எனும் புதிய சூப்பர் கண்டம் உருவாக வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
