உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
முதல் பாறை கோள்
சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிரினங்கள் வாழக்கூடிய கோள்கள் உள்ளனவா என நாசா விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 1990களில் இருந்து இதுவரை 6200 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 'எல்.எச்.எஸ் 1140பி' என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் நிறையை விட ஐந்து மடங்கு அதிகம். இதில் திரவ நீர் இருப்பதற்கு ஏற்ற சரியான அளவிலான வெப்பநிலை உள்ளது. இவை உறுதியானால் வளிமண்டலம் கண்டறியப்பட்ட முதல் பாறை வகை கோள் இது என தெரிவித்துள்ளனர்.
